Pages

Sunday, August 4, 2013

இந்திய ராணுவம். - ஒரு சாதனைச் சிகரம்.

"  நாங்கள் கண்விழித்து காப்பதால் தான் நீங்கள் கண் மூடி நிம்மதியாகத் தூங்குகின்றீர்கள்"  - இது  எல்லைப் பகுதியைக் காக்கும் ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனும் கூறும் வாசகம்.   மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒர் சாதாரண வாசகமாகத் தெரியும். ஆனால்  அவர்கள் அங்கு ஆற்றும் அரும் பணிகள் யாவும் வெளியே தெரிவதில்லை.

   சமீபத்தில் facebook ல் இந்திய ராணுவத்தின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ள பலவற்றை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உதாரணமாக ஒரு செய்தி. ஒரு சாதாரண ஏணியில் ஏறுவதற்கே நாம் பல முறை யோசித்து , பலமாக உள்ளதா என்று பார்த்து பின்புதான் ஏறுவோம். ஆனால் சியாச்சின் பகுதியில் பனிக்காற்றில் ஐஸ்கட்டிகள் பறக்க ஒரு மலையிலிருந்து மற்றோர் மலைக்கு ஏணி மூலமாக படுக்கை வசத்தில் கடக்கும் காட்சியை புகை படமாக எடுத்து அனுப்பியிருந்தனர். விழுந்தால் அதள் பாதாளம்.

     மயிர்கூர்செரியும் அக்காட்சியைப் பார்த்த பொழுது ஒவ்வொரு இந்திய ராணுவவீரன் மீதும் மரியாதை வந்தது. தேச நலனைப் பெரிதாகக் கருதாமல் ராணுவத்திற்காக வாங்கப் படும் ஒரு சிறு ஆணியில் கூட லஞ்சம் வாங்கும் நமது அரசியல் வாதிகள். தரமற்ற துப்பாக்கி முதல் ஹெலிக்காப்டர் வரை நம் தலையில் கட்டும் அந்நிய நாடுகள். தீபாவளி பொம்மைத்துப்பாக்கியைக் கூட சுட்டுப் பார்க்காத லோக்கல் அரசியல்வாதிகள் முதல் பிரதமர் கனவுகாணும் முலாயாம் வரை கண்மூடிக் கொண்டு இந்திய ராணுவத்தை விமர்சிக்கும் தலைவர்கள். வெள்ளித் திரையில் ஒரு கையில் துப்பாக்கியை ஏந்திய படி நீண்ட வசனம் பேசி பிறகு சிறு காயம் கூட படாமல் 5 அடி துரத்தில் எதிரியைத் தாக்கி அழிக்கும் நாயகர்கள். ஒரு முறையாவது எல்லைப் பகுதிக்குச் சென்று அவர்களை மகிழ்வித்திருப்பார்களா?
 
    இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொரு அன்பருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். உங்களுக்கு face book ல் account இருந்தால் தயவு செய்து INDIAN ARMY பகுதியைத் தேர்ந்தெடுத்து LIKE கொடுங்கள். அவர்கள் அனுப்பும் அற்புதமான புகைப்படங்களுக்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது அவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்க வழிவகுக்கும். குடும்பம் குழந்தைகளைப் பிரிந்து எங்கோ ஒரு எல்லைப் பகுதியில் இந்த நாட்டைக் காக்கும் அந்த வீரர்களுக்கு ஒர் அருமருந்தாக இது அமையும்.http://www.thamizmanam.com/www.valaipokkal.com
   

No comments:

Post a Comment