Pages

Friday, May 31, 2013

அரசுத் தேர்வு முடிவுகளும், ஊடகங்களின் உள்ளாடலும்

  சமீபகாலமாக அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் அந்தத் தேர்வை எழுதிய மாணவர்களோ அவர்களது பெற்றோர்களோ அல்லது அவர்களது பள்ளிகளோ டென்ஷனாக இருப்பார்கள் என்று நாம் நினைத்தால் நாம் வடிகட்டின முட்டாள்.  மிகுந்த பரபரப்போடும் பதைபதைப்போடும் காணப்படுபவர்கள் மீடியாக்காரர்களே.

    இவர்கள் பரபரப்புக்கு என்ன காரணம்?  இன்னும் 2 நாட்களுக்கு செய்தி என்ற பெயரில்  ஒரு விருந்து கிடைத்துவிட்டது. மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் முதல் மாவட்டம், வட்டம் , ஒன்றியம், தெரு வரை இது தொடர்கிறது.

  முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கொடுக்கும் பேட்டி இன்னும் கொடுமை. இனிப்பு என்ற பெயரில் லட்டுகளை மாணவர்களின் பெற்றோர்கள் அந்த மாணவனுக்கும் மாணவன் அவனது பெற்றோர்களுக்கும்  திணிப்பதைப் பார்த்தால் இனி லட்டே சாப்பிடத்தோன்றாத அளவிற்கு close-up ஷாட் வேறு.

   இந்த வெற்றிச் செய்தி வ்ந்துகொண்டிருக்கும் பொழுதே தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் list ம் வருகிறது. அவர்களுக்கு எத்தனையோ தனித்திறமைகள் இருந்தும் மார்க் என்ற ஒரு அமிலத்தால் அந்த மொட்டுக்கள் கருக்கப்படுவது தான் வேதனை.

    இதெல்லாம் சரி. 10ம் வகுப்பில் முதலிடம் வந்த எத்தனை மாணவர்கள் 12ம் வகுப்பில் முதலிடம் வருகின்றனர்? தப்பித் தவறி ஒன்றிரண்டு மாணவர்கள் இதற்கு விதி விலக்காக இருக்கலாம். இந்த மீடியாகள் முதலிடம் பெற்றவர்களை உலகிற்குக் காட்டவில்லை. மாறாக அந்த மாணவர்களின் தலையில் கர்வம் என்னும் அரக்கனை ஏற்றிவிடுகிறார்கள். இது அவர்களின் வாழ்கையை வெறும் 2 வருடத்தில் மாற்றிவிடுகிறது.

  ஊடகங்களே உங்களுக்கு ஒர் வேண்டுகோள். தயவுசெய்து முதலிடம் பெற்ற மாணவனின் செய்தியை மீண்டும் மீண்டும் போட்டு அவர்கள தன் நிலையை மறக்கச் செய்யாதீர்கள்

  பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் முதலிடம் பெற்றால் அவர்களுடன் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். அதே நேரத்தில் வாழ்க்கை இத்துடன் முடிவத்தில்லை. இதுதான் ஆரம்பம் என்று மெல்லியாதக அறிவுருத்துங்கள். அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

  மாறாக உங்கள் குழந்தைகள் தோல்வியுற்றால் திட்டாதீர்கள். கனிவாக எடுத்துச் சொல்லுங்கள். உங்களின் வார்த்தைகள் ,உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் தேர்வில் முதலிடம் பெற்று உங்கள் முகங்களையும் ஊடகங்களின் முன்னிற்கச் செய்யலாம்.
 

Thursday, May 30, 2013

குமாரசாமியின் காமெடி பேச்சு

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி காவிரி நீரை சமமாக  இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனக்கூறியுள்ளார். இதைக் கூறியது சென்னை விமானநிலையத்தில். உண்மை நிலை என்ன? இவர் முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. இது போகட்டும் காவிரி நீரைப் பகிர்தல் என்பது மழை  அணைகளின் நீர் இருப்பு  மற்றும் நீர்வரத்து ஆகியவற்றைப் பொருத்தது. கர்நாடக மக்கள், அரசியல்வாதிகளின் போலியான பேச்சுக்கு செவிசாய்கின்றன்ர். காவிரி தவிர்த்து அம்மாநிலத்தின் பொதுவான கட்டமைப்பு எப்படிய்ள்ளது? சமிபத்தில் கர்நாடகச் சுற்றுப் பயணம் செய்தபோது ஒன்று தெளிவாகத் தெரிந்தது. மின்சாரம் என்பது பெங்களுருவில் 2 மணிநேரம் தடை. மற்ற இடங்களில்? அதிக பட்சமே 2 மணி நேரம் தான் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டனர். சாலை வசதி? அது அத்ற்குமேல். பல இடங்களில் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது.

    இதற்கெல்லாம் கவனம் கொடுக்காமல் காவிரி ஒன்றையே ப்ரதானமாக வைத்துக் கொண்டு ஆட்சியை சுகமாக நடத்துகின்றனர். காவிரிக்காக லபோதிபோ வென்று குதிக்கும் "வாட்டாள்'நாகராஜ் போன்றவர்கள் மக்களின் இது போன்ற வாழ்வாதரப் பிர்ச்சனைகளுக்கும் குரல் கொடுக்கட்டும் . ஏற்கனவே உணவு உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து கொண்டுவரும் நேரத்தில் மக்களின் அடிபடை தேவைக்காக அரசியல்வாதிகள் உழைக்கட்டும்.


  இல்லையெனின் "நடந்தாய் வாழி காவேரி" என்பது " முடக்கு வாத காவேரி"யாக மாற்றிவிடும்.

Thursday, May 16, 2013

"அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி இம்முறை அதிகம். தனியார் பள்ளிகளில் சென்றமுறை 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் பல் இந்தத் தடவை 100% பெறவில்லை."--- செய்தி.  இந்தச் செய்தியைச் சொல்லி மகிழும் பெற்றோர்கள் யாவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். முதலில் தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கட்டும். இப்பொழுது ஆங்கிலவழி படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்டையான வாய்ப்பாடு தெரியவைல்லை. இவர்களுக்கு மனகணக்கு என்பது மிகவும் கொடுமையான் விஷயமாக உள்ளது. இந் நிலை எப்போது மாறும்?

Wednesday, May 15, 2013

சித்தராமையாவை  எதிர்த்து மல்லிகார்ஜுன கார்கே ஆதரவாளர்கள் போராட்டம்.- செய்தி. காங்கிரஸ்னாலே கலகம் தானேப்பா
"கூடங்குளம் மின் உற்பத்தி ஜுன் மாதத்திற்கு ஒத்திவைப்பு"- செய்தி.
பேசாமல்  15 நாட்களுக்கு ஒரு முறை ஒத்திவைக்கப்படும் என அறிவித்துவிடலாம். மக்களின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஏற்படாமசும், அதே நேரத்தில் போராட்டக்காரகளை போராடவிடாமலும் செய்துவிடலாம். ஒரே கல்லில் 2 மாங்காய்

Sunday, May 12, 2013

ஓசுர் நகருக்குள் யானைகள் வந்தன. - செய்தி. காடுகளுக்குள் தண்ணீர் இல்லாத போது அவை நகருக்குள் வருகின்றன. இனியாவது வனங்களை பாதுகாக்க வேண்டும். இல்லையெனின் புலி, சிறுத்தை போன்ற மிருகங்களும் ஊருக்குள் வந்துவிடும். மரம் வள்ர்ப்போம். வனங்கள் காப்போம்

Saturday, May 11, 2013

sudhakumaar: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித...

sudhakumaar: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித...: யாரேனும் எஸ். ராமகிருஷ்ணனின் "யாமம்" புத்தகம் படித்தீர்களா? முடிந்தால் படிக்கவும். தற்சமயத்தில் நான் படித்த நாவல்களில் மிகவும் பா...