Pages

Saturday, April 23, 2016

குடும்பச் சானலும் , குதர்க்க குடும்பமும்

இடம்: மத்திய தர குடும்பம் வசிக்கும் வீடு.
பாத்திரம். ராகவன் அவர் மனைவி சாந்தா, மற்றும் குடும்பச் சானல் ஆட்கள்.

சானல்: வணக்கம், நாங்க குடும்பச் சானலிலிருந்து வருகிறோம்
.
ராகவன்: வணக்கம். எந்த குடும்பச் சானல்? திமுக வா? அதிமுக வா? கேப்டனா? பாமக வா? அல்லது ஸ்டார் டிவி குடும்பமா?

சானல்: அதெல்லாம் இல்லைங்க. இது "குடும்பச் சானல்"

ரா:. ஓ.. இந்த எல்லோருடைய கருத்துக்களையும் பதிவு பண்ணிட்டே இருப்பாரே "வரதராஜ் முண்டே". அப்புறம் கேள்வி கேட்டுட்டு எதுக்கு சிரிக்கிறோம்னு தெரியாம சிரிப்பாரே "கிரிதரன்" அந்த சானலா?

சானல்: அந்த சானல் இல்லைங்க. நாங்க குடும்ப பெண்களுக்குத் தேவையான வீட்டுக்குறிப்பெல்லாம் சொல்லுவோம், முக்கியமா வென்னீர் போடறது, அடுப்பு பத்தவக்கிறது அது பத்தி...

ரா: ஓகே.. ஓக்கே... இப்போ எதுக்கு எங்க வீட்டுக்கு வந்திருக்கிங்க?
சானல்: அதுவா.. ஒங்கள சில கேள்விகள் கேட்போம். முடிவில ஒரு பரிசு கொடுப்போம்.

ரா: நல்லது

சேனல்:  ஆனால் கேள்விகள் அனைத்தும் பெண்களுக்குத்தான்.
.
சானல்: பேட்டிய நடு வீட்டுக்குள்ள வச்சிக்கலாமா? அல்லது தோட்டத்துல வச்சிக்கலாமா?

ரா: இது அக்ரஹாரம். இங்க தனியா தோட்டமெல்லாம் கிடையாது
.
சேனல்: (சாந்தவிடம்) நீங்கள் house wifeஆ?

சாந்தா: (ராகவனை காட்டி) இல்லைங்க 20 வருஷமா நான் அவரோட wife தாங்க.

சே: அது இ்ல்லைங்க. நீங்க வேலைக்குப் போறவவங்களானு கேக்கறோம்.

சா: ஒ அதுவா! நான் வீட்டில இருக்கிறப்போ house wife ங்க. Office போனா office wife ங்க..

சேன்: நீங்க facebook twitter இதுல account வச்சிருக்கிங்களா?

சாந்: இல்லங்க nationalised bank ல தான் வச்சிருக்கோம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இரு்க்கிறத இழந்துடக்கூடாது பாருங்க.

சேன்: facebook twitter கறது சமூக வலைதளங்கள்.

சாந்: எங்க வீட்டுல எப்பவாவது சிலந்திதான் வலை போடும். அதையும் என் husband உடனே clean பண்ணிடுவார்.

சேன்: அதவிடுங்க.. உங்க வாழ்க்கையில நடந்த ஏதாவது சுவையான நிகழ்ச்சிய சொல்லுங்க.

(ராகவனனும் சாந்தாவும் குசு குசுப்பாக பேசுகின்றனர்)

சாந்: பல நிகழ்ச்சிகள் இருக்கு எத சொல்லறது..

சான: (உற்சாகமாகி) சமீபத்துல நடந்த ஒண்ணச் சொல்லுங்களேன்..

சாந்: சமீபத்துல நடந்ததுனா..ஆங்.. போன வாரம் நடந்தது.

சான: சொல்லுங்க..

சாந்: நான் ,என் கணவர் அப்புறம் குழந்தைகள் எல்லோருமா சேர்ந்து மால்குடி மிட்டாய் போய் கருப்பட்டி மிட்டாய் சாப்பிட்டோம். நல்ல sweet ஆ இருந்தது.

சானல்: ஏங்க கடிக்காதீங்க..

சாந்: போனவாரம் சாப்பிட்டத இந்தவாரம் கடிக்காத னா எப்படி

சானல்: அய்யோ அய்யய்யோ.. இனிமே யாரையுமே பேட்டி எடுக்க போகவே மாட்டேன்..
(தலைதெறிக்க ஓடுகிறார்)

ராகவனும் சாந்தாவும் வாசற்கதவை மூடிவிட்டு வருகின்றனர்.

சாந்தா ராகவனிடம்.:
அவனவன் பருப்பு விலை உயர்வு அரிசி விலை உயர்வு தண்ணீர் கஷ்டம்னு கவலைப் பட்டுண்டு இருக்கிற நேரத்தில பேட்டி ,பரிசு சுவையான நிகழ்ச்சினு  வந்துட்டானுக.. இனிமே பேட்டி எடுப்பாங்க..

திரை