Pages

Monday, January 12, 2015

யோகா - ஒர் பார்வை.

        மூட்டுவலி என்பது இன்றைய நாட்களில் ஒர் சாதாரணமான விஷயம்.  ஒரு கவளம் அளவிற்கு மாத்திரை உண்பது என்பது சர்வசாதாரணமாக உள்ளது. இதை தடுப்பது மற்றும் வருவதற்கு முன்பே கூட நிறுத்த முடியும்.

  சில எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமானது. யோகா வினால் இதை முற்றிலும் குணப்படுத்த முடியும். தினமும் காலை  அல்லது மாலை முடிந்தால் இருவேளையும் 15 நிமிடப் பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

  பெரிய அளவில் உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மேலும் மூட்டு  வலி மட்டுமல்லாது இரத்தக் கொதிப்பு, கொழுப்பு சத்து  ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

  யோகப்பயிற்சி என்பது விபூதி கொடுக்கும் செயல் அல்ல. அதெல்லாம் செய்ய நினைத்தாலும் முடியாது. ஆனால் நாமே நம்மை உணர்ந்து கொள்ளவும், உற்சாகமாக வாழவும் உதவும் என்பதில் ஐயமில்லை