Pages

Tuesday, July 30, 2013

தெலுங்கானா - கிளர்ச்சியின் திறவுகோல்

  இன்று ஐக்கிய முன்னணி கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் கூடி தனித் தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்தியாவில் புதிய ஒரு மாநிலமாக தெலுங்கானா உருவாகும்.  இதன் மூலம் இந்திய வரைபடத்தில் ஒரு மாநிலத்திற்கான இடத்தில் புதிய வண்ணமாகத் தெரியும். அவ்வளவு தான். இதைத் தவிர வேறு எதுவும் புதிதாக நடந்துவிடப் போவதில்லை.

  இவ்வளவு நாட்களாக தனித் தெலுங்கானா கோரி போராட்டம் நடத்தியவர்கள் தெலுங்கானா என்ற மாநிலம் இல்லாததால் தான் ஆந்திரா மொத்தமும் வறுமையின் பிடியில் இருப்பது போலவும், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது போலவும் பலவாறாக பேசி மக்களை, குறிப்பாக மாணவர்கள், அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் கிளர்ச்சியிலும் ஈடுபட மனமாற்றம் செய்தனர்.

  இனிமேல் மேற்சொன்ன எந்த கஷ்டமும் தெலுங்கானா மாநிலத்திற்கு வராது, தேனாறும், பாலாறும் வெள்ளமாக ஓடும் என்று நினைத்தால் அவர்கள் நினைப்பில் மண் தான் விழப் போகிறது. முதலில் நிர்வாகத்தில் எந்தெந்தப் பகுதி யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் ஏற்படும். அது ஒரு மாதிரியாக சரியான பின்புதான் மக்கள் சம்மந்தமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார்கள். இதற்கிடையில் தனித் தெலுங்கானா கூடாது என்று கூறும் அமைப்பினர்களின் கிளர்ச்சியை வேறு இரு மாநிலங்களும் அடக்க வேண்டியிருக்கும்.இதையெல்லாம் விட இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழும் சராசரி மக்களின் நிலையே மிகவும் கஷ்டத்திற்குரியதாக இருக்கும். இவர்கள் எந்த ஒரு, அரசின் உதவியைப் பெற வேண்டியிருந்தாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்தின் காரணமாக அலைக்கழிக்கப் படுவார்கள். (இதில் அரசு அதிகாரிகளின் அலட்சியம் மிக அதிகமாக இருக்கும்)

    இனி மத்திய அரசிற்கு புதிய சிக்கல் ஏற்படும். இனி காங்கிரஸ் வரப் போவதில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் பா.ஜ.க வும் தனித் தெலுங்கானா விற்காக போரட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் எதிர்காலத்தில்  எந்த ஒரு தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடந்தாலும் பா.ஜ.க வும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாக கூர்க்காலாந்து பிரச்சனை துவங்கிவிடும். அவர்கள் ஏதடா சாக்கு என்று காத்திருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.

   பிறகு விதர்பா மாநிலம், அப்புறம் வேறு ஏதாவது ஒன்று என்று புதிது புதிதாக கிளம்பிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம்  தங்களுக்கென்று மாநிலக் கோரிக்கையை வைக்கும். இதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு இந்த கிளர்ச்சியாளர்களை அடக்கவே நேரம் சரியாக இருக்கும். சாலையின் ஒரங்களில் உள்ள மரங்கள் யாவும் நடு ரோட்டில் கிடக்கும். பெரும் பாறைகள் யாவும் தண்டவாளங்களுக்கு  குறுக்கில் போடப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கீழ் நோக்கிச் செல்லும். இதைத் தவிர வேறுஎதுவும் புதிதாகவும் உருப்படியாகவும்  நிகழப்போவது ஓன்றும் இல்லை.http://www.thamizmanam.com/www.valaipookkal.com

No comments:

Post a Comment