Pages

Sunday, August 11, 2013

வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன்

  ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றதும் நம்  நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும் பால்கோவாவும் தான். ஆனால் அங்குள்ள சிவன் கோவிலின் பெருமையை பெரும்பாலனவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

   பாடல் பெற்ற சிவதலமான இக் கோயில் ஸ்ரீவில்லிபுதூர் - தென்காசி சாலையில் அமைந்துள்ளது. சிவ பெருமான் வைத்தியநாதனாக சிவகாமி அம்பாள் சமேதராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். எல்லா சிவன் கோவிலைப் போலவே இதுவும் அமைந்துள்ள இக் கோயிலின் தனிச் சிறப்பு  என்ன?

   இச் சிவன் பல்வேறு வியாதிகளுக்கு வைத்தியம் (அருள்) செய்கிறார். முக்கியமாக இங்கு நடைபெறும் மகாதேவ அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாதேவ அஷ்டமியன்று முதல் பந்தியில் சிவன் உண்பதாக ஐதீகம். ஆகவே இந்த பந்தி முடிந்ததும் பொதுமக்கள் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்  செய்வது வழக்கம்.

   இதில் ஜாதி பேதமின்றி, பதவி, பணம் , அந்தஸ்து பாகுபாடின்றி பலரும் உருளுவதைக் காணலாம். இதில் அங்கப்பிரதட்சணம் செய்தால் தீராத வயிற்றுவலி தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. அதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். இதுவும் தவிர பலரும் பல வேறு கோரிக்கைகளுக்காக நேர்ந்து அங்கப்பிரதட்சிணம் செய்வர்.

  இதுவும் தவிர பலரும் அறியாத விஷயம் இது. சிவனுக்கு அபிஷேகம் செய்யும் முதல் தீர்த்தத்தை பருகினால் புற்று நோய்க்கு அருமருந்தாகும்.  சிவனுக்கு திருவனந்தலுக்கு பால் கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும்.

  இதையும் தவிர பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள இக் கோயிலை வாழ்க்கையி ஒரு முறையேனும் தர்சித்தேதீர வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வாருங்கள். வியாதிகளைத் தீர்ப்பான் வைத்தியநாதன். சிந்தை குளிர அருள்வான் சிவன்.

http://www.valaipookkal.com/http://www.thamizmanam.net

No comments:

Post a Comment